இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் சுனி கோஸ்வாமி (82 வயது) மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் நேற்று முன்தினம் காலமானார். 1962ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றதில் முக்கிய பங்களித்த சுனி கோஸ்வாமி, இந்திய கால்பந்து ரசிகர்களின் முதல் ஹீரோ என்றால் மிகையாகாது. பெங்கால் அணிக்காக முதல்தர கிரிக்கெட்டிலும் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், 1971-72 ரஞ்சி சீசனில் சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.