துவணி அறக்கட்டளை ‘செல்லக்குட்டி’ திட்டத்தின் கீழ் ஊரடங்கால் தவித்த 9 ஆயிரம் நாய்களுக்கு உணவு: விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் வழங்கப்பட்டது

வேலூர்: விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் வழக்கறிஞரும், விலங்குகள் மீதான கொடுமையை தடுப்பதற்கான அமைப்பின் (எஸ்பிசிஏ- வேலூர் மாவட்டம்) துணைத் தலைவருமான அனுஷாசெல்வம் ஆகியோரால் துவணி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் முதல் திட்டம் ‘சிறகுகள்’ என்ற திட்டத்தின் மூலமாக அரசாங்க  பள்ளிகளுக்கு உதவுவது, குறிப்பாக கிராமப்புற பெண்கள் படிக்கும்  பள்ளிகளுக்கு உதவுவது.  இரண்டாவதாக கால்நடைகள்  மற்றும் சாலையோரத்தில் உள்ள நாய்கள் மற்றும் பிற பிராணிகளுக்கு உதவுவதுதான்.

தற்போது கொரானா வைரசால் ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலையோரத்தில் உள்ள நாய்கள் உள்ளிட்ட பிராணிகள் உணவு கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு. இதனை கருத்தில் கொண்டு துவணி அறக்கட்டளை சார்பில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு  உணவு வழங்கப்படுகிறது. தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனரும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளருமான ஜே.நவநீதகிருஷ்ணன் தலைமையில் புளூ கிராஸ் (விலங்குகள் நல அமைப்பு) ஆர்வலர்களும், புதிய உலகு விலங்கு மீட்பு அமைப்பின் தலைவர் சுகுமார்,

செயலாளர் ரமேஷ் மற்றும் விலங்குகள் நலவாரிய உறுப்பினர் புனிதா உள்பட நிர்வாகிகள் மூலமாக ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, கல்புதூர், காட்பாடி, தாராபடவேடு, வேலூர், சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் 1000 கிலோ அரிசியில் சுமார் 9 ஆயிரம் விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 300 பாக்கெட் பிரட், பிஸ்கட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: