இங்கிலாந்து பிரதமருக்கு ஆண்குழந்தை பிறந்தது

லண்டன்: இங்கிலாந்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பணியாற்றிய, கேரி சைமண்ட்சுடன் தற்போது பிரதமராக உள்ள போரிஸ் ஜான்சனுக்கு காதல் மலர்ந்தது. இந்த தம்பதி கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்தனர். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் பிரதமர் போரிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். அவரது காதலியும் தனிமைப்படுத்துதலில் இருந்து மீண்டு வந்தார். நேற்று அவருக்கு  ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

Related Stories: