பாஜ எம்எல்ஏவும் சர்ச்சை பேச்சு

கோரக்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டம் பர்காஜ் தொகுதி பாஜ எம்எல்ஏ சுரேஷ் திவாரி. கொரோனா வைரஸ் பரவலுக்கு குறிப்பிட்ட அமைப்பினரே காரணம் என கூறி பேசியுள்ள வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அந்த வீடியோவில் `குறிப்பிட்ட இனத்தினரிடம் காய்கறிகளை வாங்காதீர்கள் என பகிரங்கமாகவே பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக எம்எல்ஏ திவாரியிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது: கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த 17 மற்றும் 18ம் தேதி பர்காஜ் பகுதியில் முகக்கவசம் மற்றும் சானிட்டைசர் வழங்கினேன்.

அப்போது ஒரு குறிப்பிட்ட அமைப்பினரே கொரோனா பரவ காரணம் என பொதுமக்கள் என்னிடம் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். காய்கறிகளை எச்சில் படுத்தி விற்பனை செய்வதால் அவர்கள் மூலம் கொரோனா பரவுகிறது என தெரிவித்தனர். பர்காஜில் ஏராளமான குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளனர். எனவே கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அந்த குறிப்பிட்ட வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: