டிஜிட்டல் டிவி துவங்கியது காங்.

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் உருவாக்கப்பட்ட, தேசிய பஞ்சாயத்துராஜ் தினமான நேற்று, ‘ஐஎன்சி டிவி’ என்ற டிஜிட்டல் தொலைக்காட்சியை காங்கிரஸ் தொடங்கியது. கட்சியின் பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால் காணொலி வாயிலாக இந்த டிவி.யை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாகன், கட்சி பொருளாளர் பவன் பன்சால் மற்றும் செய்தி தொடர்பாளர் பவன் கேரா ஆகியோரும் கலந்துகொண்டனர். ‘மத்திய அரசிடம் கேள்விகள் கேட்பதற்கு ஊடகங்கள் அச்சம் கொள்கின்றன. அதனால், மக்களின் குரலை வெளிப்படுத்த இந்த டிஜிட்டல் தளத்தை காங்கிரஸ் தொடங்கி உள்ளது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட, ஏழை மக்களின் பிரச்னைகளை பேசுவதற்கு இதுபோன்ற ஒரு ஊடகம் தற்போது மிகவும் அவசியம்்,’ என்று வேணுகோபால் கூறியுள்ளார்….

The post டிஜிட்டல் டிவி துவங்கியது காங். appeared first on Dinakaran.

Related Stories: