தமிழகத்தில் மதுவுக்கு ஆதரவாக திட்டமிட்டு பிரசாரம் : அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக கடந்த 25 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதன் பயனாக, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாகியிருக்கிறது. இந்த சூழலை சீர்குலைக்கும் வகையில், மது இல்லாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டதைப் போன்று முன்னெடுக்கப்படும் பரப்புரைகள் கண்டிக்கத்தக்கவை. மதுக்கடைகள் மூடப்பட்டதால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அதன்பின்னர் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றின் உதவியுடன் இயல்பு நிலைக்கு வந்து விட்டதாகவும் மதுவுக்கு அடிமையான பெரும்பான்மையான இளைஞர்கள் கூறியுள்ளனர். மதுவை ஒழித்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: