ஈகுவடார் தலைநகரில் கேட்பாரற்று கிடந்த கொரோனா நோயாளிகள் 800 பேரின் உடல்கள் மீட்பு: போலீசார், ராணுவம் அதிரடி நடவடிக்கை

குயாகுயில்: ஈகுவடார் நாட்டின் தலைநகர் குயாகுயிலில் உள்ள தெருக்களில் கேட்பாரற்று கிடந்த 800க்கும் அதிகமான கொரோனா தொற்றால் உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை போலீசார் மீட்டுள்ளனர்.  ஈகுவடார் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 7,466 பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஈகுவடார் தலைநகர் குயாகுயில் நகரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் உடல்கள் தெருக்களில் கேட்பாரற்று கிடப்பதுபோன்ற வீடியோ காட்சிகளை அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்திருந்தனர். உயிரிழந்த எங்களது உறவினர்களின் பிணங்களை எடுத்து செல்ல வேண்டும் என்றும் அரசுக்கு தெரிவித்திருந்தனர்.

மருத்துவமனை பிணவறைகளில் பணியாற்றும் ஊழியர்களால் பிணங்களை எடுத்து செல்ல முடியாத அவல நிலை நிலவியது. இதைத் தொடர்ந்து தலைநகர் குயாகுயிலில் போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகள் பிணங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் ஈடுபட்ட போலீஸ் மற்றும் ராணுவ குழுவுக்கு தலைமை தாங்கிய ஜார்ஜ் வேட்டட் என்பவர் டிவிட்டர் பதிவில், ‘‘போலீஸ் குழுவினர் 700க்கும் அதிகமான பிணங்களை பல்ேவறு வீடுகள் மற்றும் தெருக்களில் இருந்து மீட்டுள்ளோம். கடந்த 3 வாரங்களில் மருத்துவமனை பிணவறை நிரம்பியதால் 771 உடல்களை வீடுகளில் இருந்தும், மேலும் 631 உடல்களை வீதிகளில் இருந்தும் மீட்டுள்ளோம்.

இவற்றில் 600 பிணங்களை புதைத்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் பேட்டியளித்த ஜார்ஜ், `‘இந்த மாத இறுதிக்குள் கயாஸ் மாகாணத்தில் கொரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கை 3500 வரை இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்’’ என எச்சரித்திருந்தார்.

Related Stories: