தனியார் ஆய்வகங்களில் கொரோனா தொற்று பரிசோதனைக்கான கட்டணத்தை அரசே ஏற்கலாமே? : உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி : கொரோனா பரிசோதனைக்கு தனியார் மையங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டுமென உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா, கொரோனா தடுப்புப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், அவர்கள்

மருத்துவமனைகளின் அருகில் உள்ள சொகுசு விடுதிகளில் மருத்துவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் தான் படை வீரர்கள் என்றும் கூறியுள்ளது. மருத்துவர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் தனியார் பரிசோதனை மையங்கள் கொரோனா பரிசோதனைக்காக அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்றும் அந்த கட்டணத்தை அரசே வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. மேலும் ஊரடங்கு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: