டாஸ்மாக் கடைகளை மூடியதால் தினமும் ரூ.80 கோடி இழப்பு: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: டாஸ்மாக் கடைகளை மூடியதால் நாள்தோறும் தமிழக அரசுக்கு ₹80 கோடி இழப்பு ஏற்படுகிறது என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி நேற்று அளித்த பேட்டி:தமிழ்நாட்டுக்கு இந்த காலக்கட்டத்தில் 16,000 மெகாவாட் மின்சாரம் தேவை. தற்போது 11,000 மெகாவாட் தான் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 5,000 மெகாவாட் குறைந்துள்ளது. வீட்டுக்கு ஒருநிமிடம் கூட தடையில்லாமல் மின்சாரம் வழங்கி வருகிறோம். ஒருசில பகுதிகளில் அதிக வோல்டேஜ் வருவதால் டிரான்ஸ்பார்மர் வெடித்து விடுகிறது. இதனால் அங்கு ஒருசில பிரச்னை வரலாம். அதை பணியாளர்கள் சரி செய்து விடுகிறார்கள்.

இந்த காலக்கட்டத்தில் தடையே இல்லாத மின்சாரம் வழங்கி வருகிறோம். 14ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என ஏற்கனவே கூறியிருக்கிறோம். அதன்பிறகு சூழ்நிலையை பொறுத்து முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும். டாஸ்மாக்கில் ஒருநாளைக்கு கிட்டத்தட்ட ₹80 கோடி இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: