கோடுவெளி ஊராட்சி சார்பில் காய்கறி, மாளிகை பொருட்கள்: வேனில் விற்பனை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கோடுவெளி கிராமத்தில் ஊராட்சி சார்பில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை நடமாடும் வேனில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால்,  பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி கிராம மக்கள் 5 கி.மீ தொலைவில் உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கும், 2 கி.மீ தொலைவில் உள்ள பூச்சிஅத்திப்பேடுக்கு சென்று காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி வந்தனர்.  இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று கோடுவெளி ஊராட்சி சார்பில் திமுக  ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர் குழந்தைவேலு, துணைத்தலைவர் சரத்குமார்,  பிடிஒ ராமகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலலிதா ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி சார்பில் குறைந்த விலையில் நடமாடும் வேனில்  காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வைத்து  பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர். இதனால் பொதுமக்களும் சமூக இடைவௌியை கடைபிடித்து பொருட்களை வாங்கி சென்றனர்.

Related Stories: