மத்திய, மாநில அரசுகளின் செயல்படாத ஹெல்ப் லைன்

கொரோனா நோய் குறித்த விவரங்களை அறியவும், இதற்கான அறிகுறிகள் காணப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறிந்து கொள்ள மத்திய அரசு 011-23978046, டெல்லி மாநில அரசு 011-22307145 என்ற உதவி எண்களை அறிவித்தன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இந்த எண்கள் எந்நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த எண்களை எப்போது தொடர்பு கொண்டாலும், பிஸியாக அல்லது தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ‘பலமுறை தொடர்பு கொண்ட போதும் இணைப்பு கிடைக்கவில்லை.

 இரண்டு நாட்கள் முயற்சித்தாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை’ என்றும் கூறியுள்ளனர். இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுகாதாரத் துறை அமைச்சருக்கு டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டும் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்தவர்கள் கூறினர்.  இதே போன்று, மகாராஷ்டிரா, பாஜ ஆளும் அரியானா, உத்தர பிரதேச மாநிலங்களிலும் உதவி எண்கள் செயல்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

Related Stories: