கொரோனா பீதி காரணமாக 1 மீட்டர் இடைவெளியில் அமரவைத்து பக்தர்களுக்கு அன்னதானம் விநியோகம்: திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை

திருமலை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரு மீட்டர் இடைவெளியில் பக்தர்கள் அமரவைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் தங்கும் அறையில் காத்திருக்காமல் நேரம் ஒதுக்கீடு டிக்கெட் வழங்கி நேரடியாக தரிசனத்துக்கு அனுமதித்து வருகிறது. ஒரே நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் வரை அமர்ந்து சாப்பிடக்கூடிய அன்னதானம் வழங்கும் இடத்தில் தற்போது ஒரு மீட்டர் இடைவெளியில் 500 பக்தர்கள் வரை மட்டுமே அமர வைக்கப்பட்டு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் அறைகள் பெறுவதற்கான சிஆர்ஓ அலுவலகம், பத்மாவதி விசாரணை மையம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கல்யாண கட்டா மற்றும் 9 இடங்களில் உள்ள மினி கல்யாண கட்டாவில் பக்தர்கள் விரைவாக முடி காணிக்கை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் அறைகளை காலி செய்த பிறகு அந்த அறைகள் முழுமையாக தூய்மை செய்தபிறகுதான் அடுத்த பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: