கொரோனா வைரஸ் எதிரொலி: உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வு ஒத்திவைப்பு...டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உரிமையியல் நீதிபதிகளுக்கான தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப் பணியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு மார்ச் 28 மற்றும் மார்ச் 29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. கொரோனா வைரசுக்கு 7500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 25 வெளிநாட்டினர் உள்பட 150 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை பேரிடராக அறிவித்துள்ளதாலும் தமிழக அரசு கடைப்பிடித்து வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டும்,  மேற்கண்ட நாட்களில் நடைபெறவிருந்த உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: