மும்பையில் தேவையற்ற பயணத்தை மக்கள் தவிர்க்காவிட்டால் ரயில், பஸ் சேவைகள் நிறுத்தப்படும்: முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மும்பை:  ‘‘பொதுமக்கள் ேதவை யற்ற பயணத்தை தவிர்க்கா விட்டால், ரயில், பஸ் சேவைகள் நிறுத்தப்படும்,’’ என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவ்  தாக்கரே எச்சரித்துள்ளார்.  மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் வாராந்திர அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. பின்னர், அவர் அளித்த பேட்டி வருமாறு:மகாராஷ்டிராவில் 40 ேபர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நோயாளி உயிரிழந்துள்ளார். 39 நோயாளிகளின் உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா நோயாளிகளில் 26 ஆண் மற்றும் 14 பெண்கள் அடங்குவர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மும்பையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது போக்குவரத்து மூடப்படாது. ஆனால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்காவிட்டால், இவற்றை நிறுத்த வேண்டிய  கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியதிருக்கும்.

புனேயில் கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை மூட முடிவு செய்துள்ளனர். பிற நகரங்களிலும் மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை மூட கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்தால் நன்றாக இருக்கும். தற்போது போக்குவரத்து கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் அவசர தேவை இருந்தால் மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும். குறைவான ஊழியர்களைக்கொண்டு அரசு அலுவலகங்களை எப்படி நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள். நிலமையின் தீவிரத்தை மக்கள் உணர வேண்டும். வீடுகளில் தனித்து இருப்பதற்காக கையில் முத்திரை குத்தப்பட்டவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். அடுத்த 15 நாட்கள் மிக முக்கியமானவையாக இருக்கும். மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். கூட்டங்களை தவிர்ப்பதற்காக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட வேண்டும்.  இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறினார்.

Related Stories: