கொரோனா பெயரில் பல 'ஸ்பேம்'மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 வெப்சைட்களின் பெயர்கள் வெளியீடு: ரெக்கார்டட் பியூச்சர்

வாஷிங்டன்: கொரோனா பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 வெப்சைட்கள் பெயர்களை ரெக்கார்டட் பியூச்சர் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது உச்சத்தை தொட்டு, நோய்த் தொற்றுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டதாக கடந்த வாரத்திலேயே சீனா அறிவித்து விட்டது. ஆனால், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. கொரோனா வரைஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே கொரோனா மீதான பீதியால் மக்கள் இது தொடர்பான தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும், விழிப்பாக இருப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை பயன்படுத்தி பல இணையதளங்கள், நம் தனிப்பட்ட தகவல்களைத் திருட முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் சைபர் பாதுகாப்பு நிறுவனமான ரெக்கார்டட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம் கொரோனா பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 வெப்சைட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளங்கள், நமது தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த இணையதளங்களை யாரும் அணுக வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.

ரெக்கார்டட் பியூச்சர் நிறுவனம் வெளியிட்டுள்ள 14 வெப்சைட்களின் பட்டியல்

1. coronavirusstatus.space

2. coronavirus-map.com

3. blogcoronacl.canalcero.digital

4. coronavirus.zone

5. coronavirus-realtime.com

6. coronavirus.app

7. bgvfr.coronavirusaware.xyz

8. coronavirusaware.xyz

9. coronavirus.healthcare

10. survivecoronavirus.org

11. vaccine-coronavirus.com

12. coronavirus.cc

13. bestcoronavirusprotect.tk

14. coronavirusupdate.tk

Related Stories: