மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது: கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. மேடையில் இருப்பவர்கள் இடையேயான உறவு, வெறும் தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு என்று கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் திமுக முப்பெரும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

கடந்த முறை நான் கலந்துக் கொண்ட கூட்டம் இந்தியா முழுவதும் டிரெண்டானது. 8 முறை பிரதமர் மோடி வந்து கட்டமைத்த பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் ராகுல் முறியடித்தார். நாற்பதும் நமதே என முழங்கினேன். நடக்குமா என கேள்வி எழுப்பினார்கள். என் நம்பிக்கைக்கு ஆதாரம் கூட்டணி தலைவர்கள். நாற்பது தொகுதிகளிலும் வெற்றி கிடைத்துள்ளது.

40க்கு 40க்காக உழைத்த திமுக தொண்டர்கள், இந்தியா கூட்டணி கட்சியினருக்கு நன்றி. இது சாதாரண வெற்றி அல்ல. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. 2004ல் 40க்கு 40 வெற்றியை பெற்று தந்தார் தலைவர் கலைஞர்.

திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி. இது சாதாரண வெற்றி அல்ல, வரலாற்று சிறப்புமிக்க வெற்றி. மேடையில் இருப்பவர்கள் இடையேயான உறவு, வெறும் தேர்தல் உறவு அல்ல. கொள்கை உறவு.

பாஜக 400 இடங்களை கைப்பற்றும் என்று சொன்னார்கள். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்தவர்களை தலைகுனிய வைத்துள்ளோம். இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்த பாஜக முயற்சித்தது. இவ்வளவு செய்தும் பாஜகவுக்கு கிடைத்தது வெறும் 240 இடங்களே, இது மோடிக்கு கிடைத்த தோல்வி.

வாயால் வடை சுடுவதெல்லாம் உங்கள் வேலை. எங்கள் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கருத்துகளால் சுடுவார்கள். 237 எம்பிக்கள் எதிர்க்கட்சியாக இருப்பதால், பாஜகவால் நினைத்ததை செய்ய முடியாது. மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது.

 

The post மக்களுக்கான குரல் வலுவாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகிறது: கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: