கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.தற்போது டீசல் விலை ரூ.86.56, பெட்ரோல் விலை ரூ.100.50-க்கு விற்பனை ஆகிறது

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இதனால் கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இது தொடர்பாகக் கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கர்நாடகா மாநிலத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி 25.92 சதவீதத்தில் இருந்து 29.84 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல டீசல் மீதான கலால் வரி 14.3 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாக உயர்த்தப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வரி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்படுகிறது.

கர்நாடக தலைநகர் பெங்களூரில் வரி உயர்வு அறிவிப்பிற்கு முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.84ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.85.93 ஆகவும் விற்கப்பட்டது. இப்போது வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3, டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக அரசு வரி வருவாயை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் அம்மாநில அரசு சொத்துக்களின் வழிகாட்டுதல் மதிப்பை 15-30 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. அதேபோல மதுபானங்களுக்குக் கூடுதல் கலால் வரியையும் 20 சதவிகிதம் வரை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

The post கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: