நாடாளுமன்றத்திலும் பரிசோதனை துவக்கம்

கொரோனா வைரஸ் பரவி வருவதன் எதிரொலியாக நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று உடல் வெப்பநிலையை ஆராயும் தெர்மல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை 120 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 2ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. வருகிற 3ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைகிறது.

இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு வருவோர் மூலமாக கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகளை காண்பதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதியை அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். நேற்று எம்பிக்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்துக்கு வந்த ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு தெர்மல் கருவிகள் மூலமாக உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு வந்த எம்பிக்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதா என உடனடியாக தெரியவில்லை.

Related Stories: