கொரோனா அச்சம் எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவாரூர்: திருவாரூர்  மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி  மையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அங்கன்வாடி குழந்தைகளுக்கு வீட்டிற்கே சென்று சத்துணவு தரவும் அவர் உத்தரவு  பிறப்பித்திருக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், அதன் தாக்கத்தை குறைப்பதற்காக மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கன்வாடி பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இதனை தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் நேற்று தமிழக முதல்வர், எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மழலையர் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் 1260 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் வழக்கம் போல் அங்கன்வாடி மையங்களில் பயின்று வருகின்றனர். தொடர்ந்து, அங்கன்வாடி மையங்களிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தற்போது ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார். அதில் அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகள் வரவேண்டாம். அதே நேரத்தில் அங்குள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில்  ஈடுபடுவர். அவர்கள் குழந்தைகளுக்கு தேவையான இடை உணவு மற்றும் மத்திய உணவினை தயாரித்து அவர்கள் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்ற அறிவிப்பும் அவர் வெளியிட்டுள்ளார்.

Related Stories: