கீழடி அருகே கொந்தகை அகழாய்வில் முதுமக்கள் தாழியின் மூடிகள் கண்டுபிடிப்பு

திருப்புவனம்: கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியின் போது முதுமக்கள் தாழி மூடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி மற்றும் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்து வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ள்ளது. கொந்தகையில் நடந்து வரும் ஆய்வின்போது முதுமக்கள் தாழியின் மூடி கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் பல்வேறு வடிவங்களில் அதிகளவில் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழிகளின் அருகே அதன் மூடிகள் கிடைத்துள்ளன.

நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் மூடியுடன் கூடிய தாழிகள் கிடைத்தாலும் மூடிகள் சாதாரண வடிவத்தில் இருந்தன. தற்போது கொந்தகை அகழாய்வில் கிடைத்த தாழி மூடியில், பிடிமானப்பகுதி கருப்பு நிறத்திலும் கீழ்ப்பகுதி சிவப்பு நிறத்திலும் என இரு வண்ணங்களில் உள்ளது. கூம்பு வடிவிலும் உள்ளது. தாழிகள் குறைந்த ஆழத்திலேயே கிடைத்துள்ளதால் இதற்கு கீழே மேலும் தொல்பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், கொந்தகையில் இந்த இடம் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

Related Stories: