வெள்ளை யானைகளின் தேசம்

நன்றி குங்குமம் முத்தாரம்

உண்மையில் வெள்ளை யானை  வெள்ளை நிறத்தில் இருக்காது. அது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இது ஒரு அரிய ரக யானை. இந்த யானைகளிடமிருந்து எந்த வேலையையும் வாங்க மாட்டார்கள். ஆனால், அதை வளர்ப்போருக்கு பெரும் பொருட்செலவு ஏற்படும்.கெளரவத்துக்காகவும், பெருமைக்காகவும்  இவை வளர்க்கப்படுகின்றன.உலகில் வெள்ளை யானைகள் அதிகம் காணப்படும் நாடு தாய்லாந்து. அதனாலே தாய்லாந்தை வெள்ளை யானைகளின் தேசம் என்று அழைக்கின்றனர்.

தாய்லாந்து மக்கள் வெள்ளை யானையைப் புனிதமாகக் கருதுகின்றனர். தங்கத் தட்டில் தான் வெள்ளை யானைகளுக்கு உணவளிக்கப்படுகிறது. மேலும் அரசருக்குரிய அனைத்து வசதி களும் அவற்றுக்கும் செய்து தரப்படுகிறது. தவிர, புதிதாக வெள்ளை யானையைக் கண்டுபிடிப் போருக்கு வரிச் சலுகையளிக்கப்பட்டு அரசு நிலங்களும் பரிசாக அளிக்கப்படுகிறது. தாய்லாந்து நாட்டின் மேம்பாட்டுத் தந்தை என்று அழைக்கப்படும் மொங்குட் அரசரின் தலைமையில் வடிவமைக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் தேசியக்கொடியில் வெள்ளை யானையின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: