கடந்தாண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 1.49 லட்சம் பேர் உயிரிழப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் குறைவான எண்ணிக்கையில் தமிழகம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தஆண்டு நடந்த சாலை விபத்துகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2019ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 1.49 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இந்தப் பட்டியலில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலமாக உத்திரப்பிரதேசம் உள்ளது. மொத்த உயிரிழப்புகளில் 15% உத்திரப் பிரதேசத்தில் நிகழ்ந்தவை. அதாவது கடந்த ஆண்டு அந்த மாநிலத்தில் மட்டும் 22,655 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு ராஜஸ்தான், ஒடிசா, பீகார், சத்தீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களில் அதிக இறப்புகளை கொண்ட மாநிலங்களாக உள்ளன. டெல்லி, குஜராத், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

டெல்லியில் கடந்த 2018ம் ஆண்டைக்காட்டிலும் 2019ம் ஆண்டில் 227 இறப்புகள் குறைந்துள்ளன. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் 696 இறப்புகள் குறைந்துள்ளன. கர்நாடகாவில் 673 இறப்புகள் குறைவாக பதிவாகியுள்ளன. கடந்த 10 வருடத்தை எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்துள்ளன. கிட்டத்தட்ட 10,317 இறப்புகள் குறைந்துள்ளன. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்திய மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்புக்கான உச்சநீதிமன்றத்தின் குழுவிடம் அந்தந்த மாநிலங்கள் குறிப்பிட்ட விவரத்தின் படி இந்த புள்ளிவிவரமானது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: