சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் அரசு சொத்தை நொறுக்கியவர்கள் பெயர், புகைப் படத்துடன் பேனர்: பொது இடங்களில் வைத்து உபி அரசு அதிரடி

லக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்கள் விவரங்கள் அடங்கிய பேனரை உபி அரச பொது இடங்களில் வைத்துள்ளது.   குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த டிசம்பர் மாதம் உத்தர பிரதேசத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் திடீரென கலவரமாக வெடித்தது. அப்போது, வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.  வன்முறையில் ஈடுபட்ட 50 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரூ.1.55 கோடி அளவுக்கு பொதுச்சொத்தை சேதப்படுத்திய அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில், சிஏஏ போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியவர்களின் பெயர்கள், புகைப்படங்கள், அவர்களின் முகவரி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவுப்படி, லக்னோ நகர நிர்வாகம் இந்த பேனர்களை நகரெங்கும் ஒட்டியுள்ளது.

Related Stories: