தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை

புதுடெல்லி: தேர்தல் முடிந்த பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர்களின் விவரங்களை சர்வே என்ற பெயரில் பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:  நாட்டின் பல்வேறு பகுதிகளில், சர்வே என்ற பெயரில் வாக்காளர்களின் பெயர்களை அரசியல் கட்சிகள் சேகரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. நேரிலோ, விளம்பரங்கள், மொபைல் ஆப்கள் மூலம் இந்த பெயர் சேகரிப்பு நடக்கிறது.

தேர்தல் முடிந்த பிறகு நலத் திட்டங்களில் சேர்ந்து பலனை பெறுவதற்காக இந்த பெயர்கள் சேகரிக்கப்படுவதாக புகார் வந்துள்ளன. வாக்களிக்க பணம் தருவதும், வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும் எனவே, சர்வே என்ற பெயரில் வாக்காளரின் பெயர் விவரங்களை சேகரிக்க அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களை அரசியல் கட்சிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

The post தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில் பெயர் சேர்க்க வாக்காளர் விவரங்களை பதிவு செய்ய அரசியல் கட்சிகளுக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: