திருச்சி உழவர் சந்தையில் 18வது நாளாக தொடரும் முஸ்லிம்கள் போராட்டம்

திருச்சி: குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சி உழவர் சந்தையில் முஸ்லிம்கள் 18வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திருச்சியிலும் முஸ்லிம் அமைப்பினர் ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் கடந்த 17ம் தேதி முதல் முஸ்லிம் அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வருகின்றனர். 18வது நாளான நேற்றும் தொடர் போராட்டம் நடத்தினர். இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: