மோடி மட்டுமல்ல ஆதரவாளர்களும் விலகினால் நாடு அமைதியாகும்: தேசியவாத காங்கிரஸ் தாக்கு

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடரும் ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் இருந்து விலகினால் நாடு அமைதியாக இருக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அரசின் நடவடிக்கைகள், கருத்துக்கள் ஆகியவற்றை பொதுமக்களிடம் பகிர்ந்து வருகிறார். உலக அளவில், சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பிரபல தலைவர்கள் வரிசையில், டிரம்புக்கு அடுத்தபடியாக மோடி இடம் பெற்றுள்ளார். டிவிட்டரில் அவருக்கு 5.33 கோடி பாலோயர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மோடி தனது டிவிட்டர் பதிவில் நேற்று முன்தினம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைத்தளங்களான டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றில் இருந்து வெளியேற முடிவு செய்தேன். ஆனால், அந்த முடிவை கைவிட்டு, உங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன்’’ என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மோடி எடுத்துள்ள முடிவு நாட்டின் நலனுக்கு நல்லது என்று தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது.

அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற முடிவு செய்ததாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, அவரது ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறினால் நாடு அமைதியாக இருக்கும். மோடி எடுத்த முடிவு நாட்டின் நலனுக்கு நல்லது. அதை வரவேற்கிறோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Related Stories: