2019 - 20 ஆண்டில் மானசரோவர், முக்திநாத் யாத்திரை சென்றவர்கள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: இந்துசமய அறநிலையத்துறை

டெல்லி: சீனாவின் மானசரோவர், நேபாளத்தின் முக்திநாத் யாத்திரை சென்றவர்கள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. 2019 ஏப்ரல் முதல் யாத்திரை சென்றோரும், மார்ச் 2020க்குள் செல்ல உள்ளோரும் மானியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மானசரோவர், முக்திநாத், புனித யாத்திரை செல்வோருக்கு, மானியம் வழங்கும் திட்டத்தை, அறநிலைய துறை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 2019 ஏப்ரல் 1 முதல் இம்மாதம் 31 வரை, மானசரோவர், முக்திநாத் யாத்திரை, புனித யாத்திரை மேற்கொண்டு முழுமையாக பயணம் முடித்து திரும்பியோருக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. புனித யாத்திரை முடித்த தமிழ்நாட்டை சேர்ந்த இந்து சமய யாத்ரீகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த மானசரோவர் யாத்ரீகர்கள் 500 பேருக்கு மட்டும் தலா 40 ஆயிரம் ரூபாயும், முக்திநாத் யாத்ரீகர்கள் 500 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும் என்றும், அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவினரால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒவ்வொரு யாத்திரைக்கும் தகுதி வாய்ந்த தலா 500 பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. 500க்கும் மேல் இருப்பின், ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல் முறையாக, மானசரோவர், முக்திநாத் யாத்திரை சென்றவர்களுக்கு மட்டுமே இந்த மானியம் வழங்கப்படும். மானியம் பெற www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: