ரஜினியுடன் முஸ்லிம் மதகுருமார்கள் சந்திப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தை முஸ்லிம் மதகுருமார்கள் நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கண்டனம் தெரிவித்தது. போராடும் மக்களை ரஜினி அவமதித்து விட்டார் என அவர்கள் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் ஜமாஅத்துல் உலமா சபையை சேர்ந்த முஸ்லிம் மதகுருமார்கள், சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு நேற்று வந்தனர். அங்கு ரஜினியை சந்தித்து ஒரு மணி நேரம் அவர்கள் பேசினர்.

பின்னர் உலமா சபையின் தலைவர் காஜா மொய்னுதீன் கூறியது:

சிஏஏ, என்பிஆர் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டால், அதனால் முஸ்லிம் சமூகத்தினருக்கு ஏற்படும் பல்வேறு இடர்பாடுகள், இன்னல்கள் குறித்து ரஜினியிடம் விரிவாக எடுத்துரைத்தோம். எங்கள் தரப்பு நியாயங்களை அவர் தெளிவாக புரிந்து கொண்டார். இந்த விஷயத்தில், முஸ்லிம் சமூக மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்க தம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக எங்களிடம் அவர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: