இருநாடுகளும் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடுகள்; பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் நட்புறவு காரணமாக பல நன்மைகள் கிடைக்கும்...நிக்கி ஹேலி டுவிட்

வாஷிங்டன்: பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்பிற்கு இடையேயான நட்புறவு காரணமாக பல்வேறு நல்ல நன்மைகள் கிடைக்கும் என ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். முதல்முறையாக இந்தியாவில் 2 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்,  மனைவி மெலானியா ட்ரம்புடன் நேற்று இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமானநிலையத்தில் பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பை ஆரத்தழுவி வரவேற்றார். இதனை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்பையும், மெலானியாவையும் ஆசிரமத்துக்குள்  அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, மாகாத்மா காந்தியடிகள் வாழ்ந்த இடத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

அடுத்தப்படியாக, அகமதாபாத் காந்தி நகரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட்  மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, ஆக்ரா விமான நிலையம் வந்த டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும்  மருமகனுடன் தாஜ்மகாலை 1 மணி நேரமாக பார்வையிட்டார். அத்துடன் தாஜ்மகாலுக்கு முன்பாக மனைவி  மெலனியாவுடன்  நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் ட்ரம்ப், டெல்லி புறப்பட்டார்.

2 வது நாளான இன்று குடியரசுத் தலைவர் சார்பில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனையடுத்து, இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். இதற்குப்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சார்பில் அளிக்கப்படும் இரவு விருந்தில் டிரம்ப் பங்கேற்கிறார். இதனையடுத்து, தனது இந்திய பணத்தை முடித்து கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியாவுடன் இரவு 10 மணியளவில் அமெரிக்கா திரும்புகின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, டிரம்ப்பின் இந்தப் பயணம் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்பிற்கு இடையேயான சிறப்பான நட்புறவு காரணமாக பல நல்ல பலன்கள் கிடைக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் மிக பெரிய மக்களாட்சி நாடுகள் என்றும் இருநாடுகளும் பல்வேறு கொள்கைகளில் ஒருமித்த கருத்துகளை கொண்டிருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நிக்கி ஹாலே:

ஐ.நா.,வுக்கான அமெரிக்கத் தூதராக இருந்துள்ள நிக்கி ஹாலே, கேபினட் அமைச்சர் அந்தஸ்து பெற்ற முதல் அமெரிக்க வாழ் இந்தியர் என்ற பெருமையும் பெற்றவர். குடியரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான அவர், தெற்குகரோலினாவின் கவர்னராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: