டேபிள் டென்னிஸ் கவின் மோகன், பிரீத்தி சாம்பியன்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு  ஆணையம் (எஸ்டிஏடி),  சந்திரா டேபிள்  டென்னிஸ்  மையம் சேர்ந்து டாக்டர் இந்திரா  பிஸ்வகுமார் நினைவு டேபிள் டென் னிஸ் போட்டி நடத்தின.பள்ளிகளுக்கு இடையிலான இந்த போட்டி காஞ்சிபுரம்,  கீழம்பி திருமலை பொறியியல் கல்லூரியில்  நடந்தது.   மாணவர்களுக்கான  4ம் வகுப்பு வரை பிரிவில்  பி.நிதின் (எஸ்பிஓஏ), 6ம் வகுப்பு வரை பிரிவில்  டி.வத்சன் (எஸ்பிஓஏ), 9ம் வகுப்பு வரை பிரிவில் கே.அஸ்மித் (டிஏவி), 12ம் வப்பு வரை பிரிவில் கவின் மோகன் (டிஏவி)  ஆகியோர்  முதலிடம் பிடித்து  சாம்பியன் பட்டம் வென்றனர். மாணவிகளுக்கான  4ம் வகுப்பு வரையிலான பிரிவில்  ஆர்.ஸ்ரியா (மன்தன்), 6ம் வகுப்பு வரையிலான பிரிவில்  

எம்.அனன்யா (சங்கரா), 9ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு  வரையிலான  பிரிவுகளில்  எம்.ஆர்.ஆர்.பிரீத்தி (பிவிஎம்) ஆகியோர் முதலிடம் பிடித்து  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
Advertising
Advertising

Related Stories: