வைரலாகும் பள்ளி மாணவிகள் மது குடிக்கும் வீடியோ ; பெற்றோர்கள் அதிர்ச்சி

அரியலூர்: பள்ளி மாணவிகள் சிலர் மது குடிக்கும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் உள்ள மாணவிகள் சிலர் மதுபாட்டில்களை வாங்கி வந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பகிர்ந்து குடிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது. மதுகுடிக்கும் பழக்கம் பள்ளி மாணவிகளிடம் பரவி வருவது கலாச்சார சீரழிவு என்று வீடியோவை பார்த்தவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

ஆண்கள் மட்டுமே மது அருந்திய, புகைபிடித்த காலம் போய் இன்று பெண்கள் பலரும், ஆண்களுக்கு இணையாக போதைக்கு அடிமையாகி வருகின்றனர். பெரும்பாலும் மேல்தட்டு மக்களிடம் மட்டும் சகஜமாக இருந்து வந்த இந்த பழக்கம், ஏழை-எளிய மக்களிடம் தொற்றிக்கொள்ளும் அபாயம் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு பள்ளி மாணவ-மாணவிகள் மது குடிக்கும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் உலாவருவதை ஆதாரமாக கூறலாம். பள்ளி வகுப்பறையில் வைத்து மது குடிப்பது, புகை பிடிப்பது என மாணவிகளும் இவ்வித போதைக்கு அடிமையாகும் நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ்ந்தேறி வருகிறது.

Related Stories: