இந்தியர்களை அழைத்து வரவும், மருத்துவ உபகரணங்களை சீனாவுக்கு வழங்கவும் இந்திய விமானப்படையின் விமானம் நாளை சீனா செல்கிறது

டெல்லி : சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் நாளை வூகான் நகரத்திற்கு அனுப்பப்பட உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மோசமான பாதிப்பை எட்டி இருக்கும் சீனாவுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. மருந்துகளை ஏற்றி செல்லும் விமானம் திரும்பி வரும் போது, அதில் இந்தியர்களை அழைத்து வர வெளியுறவுத் துறை அமைச்சகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. வூகான் நகரத்தில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால் அவர்கள் அங்குள்ள தூதரகத்தை அணுகும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவில் இருந்து 2 சிறப்பு விமானங்களில் 647 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தொழில்துறை முடங்கும் நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பாடு நிலையும் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் மூலம் பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளதா எனபது குறித்து பல்வேறு துறை அதிகாரிகள், செயலாளர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

Related Stories: