கலாம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் இளைஞர்கள்

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் விருட்சம் பசுமை இயக்கம், பசுமை வாசல், அப்துல்கலாம் அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 18வார்டுகள் உள்ளன. சுமார் 40ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இளைஞர்கள் மற்றும் தன்னார்வளர்கள் தங்கள்சொந்த செலவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். குறிப்பாக காந்திகிராமம் பல்கலைக்கழகம் மற்றும் அருகில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் விருட்சம் பசுமை இயக்கம் சின்னாளபட்டி பசுமை இயக்கம், பசுமை வாசல், அப்துல்காலாம் அறக்கட்டளை என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தி நகர் முழுவதும் சில பகுதிகளை தேர்ந்தெடுத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

இவர்கள் 5வது வார்டு ஜீவா நகர் பகுதியில் நர்சரி பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர். அங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை பொதுமக்களோ, தொன்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களோ கேட்டால் இலவசமாக வழங்குவதோடு அவர்கள் விரும்பும் இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.  இது குறித்து சின்னாளபட்டி பூஞ்சோலை ஜீவா நகரை சேர்ந்த ராகவன் கூறுகையில்,‘ சின்னாளபட்டி நகர் முழுவதும் மரக்கன்றுகளை நட முடிவுசெய்து மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். இதுவரை சுமார் 4ஆயிரத்து ஐநூறு மரங்கன்றுகளை நட்டுள்ளோம்.

எங்களுக்கு உறுதுணையாக விருட்சம் பசுமை இயக்கத்தை சேர்ந்த விஜயக்குமார், நாகராஜன், சரவணன், கார்த்திக், மற்றும் சின்னாளபட்டி பசுமை இயக்கத்தை சேர்ந்த துரைராஜ், சிவக்குமார், பசுமை வாசலை சேர்ந்த கோகுல்நாத், அப்துல்கலாம் அறக்கட்டளை சேர்ந்த அஜய், சிவக்கார்த்திக், அசோக் உட்பட பல இளைஞர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்து மரக்கன்றுகள் நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுவதற்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

Related Stories: