கபடி போட்டிகளில் ஜாதி, மத அடையாளத்துடன் சீருடை அணிய தடை

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கபடி ேபாட்டி நடத்த அனுமதி கேட்டு ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் பாரதி ஆஜராகி, ‘‘சட்டம், ஒழுங்கு பிரச்ைன காரணமாகவே சில இடங்களில் அனுமதி மறுக்கப்படுகிறது. இருந்தாலும், போதுமான அளவுக்கு நிபந்தனைகளுடன் அனுமதிப்பது குறித்து டிஜிபி சுற்றறிக்கை உள்ளது. அதன்படி அனுமதி வழங்கப்படும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:  போட்டி அமைப்பாளர்களும், பங்கேற்பாளர்களும் ஜாதி மற்றும் மத உணர்வை தூண்டும் வகையில் கோஷமிடக்கூடாது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான செயல்கள் கூடாது. டாக்டர்கள் உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். ஜாதி, மத அடையாளங்களை காட்டும்விதமாக சீருடைகள், பாடல்கள் மற்றும் படங்கள் இடம் பெறக்கூடாது. ஜாதி மற்றும் அரசியல் சார்புடைய பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது  என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், கபடி போட்டிகளுக்கு அனுமதிக்கலாம். நிபந்தனைகளை மீறும் வகையிலோ, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டாலோ உடனடியாக போட்டிகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories: