பள்ளிகள், ரயில் நிலையங்களில் நவீன கழிப்பிடம் கட்ட சன் டி.வி. 4 கோடி நிதி உதவி

தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அரசுப் பள்ளிகளிலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களிலும் நவீன கழிப்பறைகள் கட்ட சன் டி.வி. ரூ.4 கோடி நிதி உதவி அளித்துள்ளது. கல்வி நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல், மாணவர்களுக்கான கற்றல் சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளிலும் தெலங்கானா மாநிலத்தில் 11 பள்ளிகளிலும் ஆந்திர மாநிலத்தில் 10 ரயில் நிலையங்களிலும் நவீன கழிப்பறைகள் கட்ட சன் டி.வி. 4 கோடியே 9 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.

இதற்கான காசோலையை, சுலப் சர்வதேச சேவை அமைப்பின் நிர்வாகிகள் லில்லி குப்தா, நிர்மல்குமார் சிங், குப்தா ஆகியோரிடம்  சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். ஏழை எளியோர் நலன், சுகாதார மேம்பாடு, அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்ட சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. மற்றும் சன் பவுண்டேஷன் இணைந்து இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக  நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: