காஸ் விலை உயர்வுக்கு கண்டனம்: பாஜ போராட்ட படத்தை வெளியிட்டு ராகுல் கேலி

புதுடெல்லி: மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், மானியம் இல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் விலையை நேற்று முன்தினம் ்அது 147 உயர்த்தியது. இது, மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ், அதை திரும்பப் பெறும்படி வலியுறுத்தியுள்ளது.  

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் காஸ் விலை உயர்வை கண்டித்து போராடும் பழைய படத்தை இணைத்து வெளியிட்டுள்ளார். மேலும், `சமையல் எரிவாயு விலை விண்ணை எட்டும் அளவுக்கு 150 உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜ உறுப்பினர்கள் போராடியதை நான் ஒப்புக் கொள்கிறேன்,’ என்று கூறி கிண்டலடித்துள்ளார். அத்துடன், `விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்’ என்ற `ஹேஷ்டேக்’கையும் அவர் இணைத்துள்ளார்.

Related Stories: