'ஹிந்தி தெரியாததால் இந்திய அணியிலிருந்து என்னை வெளியேற்ற முயன்றார்கள்' : தங்கம் வென்ற வீரர் ரோஹித் மரடாப்பா பேச்சு

காட்பாடி : இந்தி மொழி தெரியாததால் இந்திய அணியில் இருந்து தம்மை வெளியேற்ற முயற்சி நடந்ததாக ஆசிய அளவிலான படகு தொடரில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரோஹித் மரடாப்பா தெரிவித்துள்ளார். காட்பாடியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடைபெறும் சர்வதேச கலை மற்றும் கலாச்சார திருவிழா நேற்று தொடங்கியது. இதில் அர்ஜுனன் விருது வென்ற வீரர் கணேசன், இந்திய படகு போட்டி வீரர் ரோஹித் மரடாப்பா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இருவரும் விளையாட்டு போட்டிகளில் வென்றவருக்கு பதக்கங்களையும் சான்றுகளையும் வழங்கினர். அப்போது பேசிய ரோஹித் மரடாப்பா, இந்தி மொழி தெரியாததால் வடநாட்டு வீரர்களின் கேலி மற்றும் கிண்டலுகளுக்கு ஆளானதாக தெரிவித்தார். இருப்பினும் இந்தியை ஆர்வமுடன் கற்றதுடன் ஆசிய அளவில் 2 முறை தங்கப்பதக்கம் வென்று சாதித்ததாகவும் ரோஹித் மரடாப்பா கூறியுள்ளார். மேலும் நாட்டிற்காக ஒற்றுமை உணர்வுடன் விளையாடியதால் தங்கப்பதக்கத்தை வெல்ல முடிந்ததாகவும் அவர் கூறினார்.

Related Stories: