மாஜி முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில்-ரேவதி நிச்சயதார்த்த விழா: முதல்வர் எடியூரப்பா நேரில் வாழ்த்து

பெங்களூரு: மாஜி முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கு பெங்களூருவில் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. இதில் முதல்வர் எடியூரப்பா உட்பட கட்சி தலைவர்கள்,  அமைச்சர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மாஜி முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி, கன்னட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் மஜதவின் இளைஞர் அணி பிரிவு மாநில தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். நிகில் குமாரசாமிக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முடிவு செய்தனர்.

முன்னாள் எம்எல்ஏ எம்.கிருஷ்ணப்பாவின் அண்ணனின் பேத்தியும், பட்டதாரியுமான ரேவதியை நிகிலுக்கு பெண் பார்த்து பேசி முடித்தனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன், நிச்சயதார்த்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் நிகில் குமாரசாமி-ரேவதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆர்.அசோக், ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் அவர்களை வாழ்த்தினர்.

Related Stories: