ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. வங்கதேச தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், சைப் ஹசன் களமிறங்கிறங்கினர். சைப் ஹசன் டக் அவுட்டாகி வெளியேற, தமிம் இக்பால் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். வங்கதேசம் 3 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், நஜ்முல் ஷான்டோ - கேப்டன் மோமினுல் ஹக் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 9 ரன் சேர்த்தது.மோமினுல் 30 ரன், ஷான்டோ 44 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த மகமதுல்லா 25 ரன், லிட்டன் தாஸ் 33 ரன், தைஜுல் அஸ்லாம் 24, ருபெல் உசேன் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.