ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்; உரை நகலை கிழித்தெறிந்த சபாநாயகர் நான்சி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரது உரை நகலை பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி கிழித்து எறிந்தது பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற யூனியன் கூட்டத்தில் 3-வது முறையாக அதிபர் டொனால்டு டிரம்ப் உரையாற்றினார். ஈரானையும், ஈராக்கையும் வசப்படுத்தி வைத்திருந்த ஐ.எஸ். காட்டுமிராண்டிகளை தான் துடைத்தெறிந்து விட்டதாக பெருமிதம் தெரிவித்தார். தற்போது அமெரிக்காவில் வறுமை ஒழிந்து, குற்றங்கள் குறைந்து வேலைவாய்ப்பில் முன்னேற்றம் அடைந்துவிட்டது என்றும் ட்டிம்ப் கூறினார்.

அமெரிக்காவின் வலிமையான பொருளாதார தடையால் ஈரான் நலிந்துவிட்டது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் தலைக்கணம் மற்றும் முட்டாள்தனத்தின் காரணமாக தங்களிடம் உதவி கேட்க மறுப்பதாகவும் ட்டிரம்ப் தெரிவித்தார். அணு ஆயுதங்களை ஈரான் உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய அதிபர் ட்ரம்ப், ஈரான் மரணத்தையும், அழிவையும் பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.

அப்போது அவருக்கு பின்னால் இருந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி உரை நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், சபாநாயகர் நான்சி பெலோசி கைகுலுக்க முயன்றார். ஆனால் ட்ரம்ப் அவரை பொருட்டாக மதிக்கவில்லை. அமெரிக்க மக்கள் பிரிதிநிதிகள் அவையின் சபாநாயகரான நான்சி பெலோசிக்கும், அதிபர் டிரம்ப்க்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தோல்வியடைய உள்ள நிலையில் அதனை கொண்டுவந்த சபாநாயகர் நான்சி பெலோசி உரை நகலை கிழித்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: