தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்...அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: சீனாவில் ஒரே நாளில் கொரோனா வைரசால் 58 பேர் பலியான நிலையில், இதுவரை 362 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 10 நாளில் கட்டி  முடிக்கப்பட்ட மருத்துவமனை தற்போது திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் மொத்தம் 362 பேர் பலியான  நிலையில், 2,829 பேர் புதியதாக வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நோய் தொற்று பாதிப்பில், 17,205 சீனர்கள்  தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், சீனாவில் இருந்து வந்த 12 பேரிடம் நடத்தப்பட்ட  சோதனை முடிவின்படி, தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என தனடு டுவிட்டர் பக்கத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியப்பின்  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 சீனர்கள் உள்பட 10 பேர் மருத்துவ கண்காணிப்பில்  உள்ளனர்.

தமிழகத்தில் 13 பேர் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொடர்பாக கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கிங் இன்ஸ்டிடியூட்டில் நடத்தப்பட்ட விரிவான  பரிசோதனைகளின் முடிவில், யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என வந்தது. கொரானா வைரஸ் பாதிக்கப்படாமல் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கைள்,  கண்காணிப்புப் பணிகள் தொடரும். கொரோனா வைரஸ் பாதிப்பு என வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். மேலும், அனைத்து மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும்  விரிவுப்படுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

Related Stories: