முத்தரப்பு மகளிர் டி20 இந்தியா வெற்றி தொடக்கம்

கான்பெரா: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரலியாவில் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து - இந்தியா மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹீதர் நைட் 67, டாமி பியூமான்ட் 37ரன் எடுத்தனர். நதாலியே ஸ்கிவர் 20 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ராஜேஸ்வரி, ஷிகா பாண்டே, தீப்தி சர்மா தலா 2 விக்கெட், ராதா யாதவ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஸ்மிரிதி மந்தனா 15, ஷபாலி வர்மா 30 ரன் சேர்த்து நல்ல தொடக்கம் தந்தனர். தொடர்ந்து  ஜெமீமா 26, வேதா 7, தான்யா பாட்டியா 11 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 19.3 ஓவரில்  5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.கேப்டன் ஹர்மான்பிரீத் 42, தீப்தி சர்மா 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணியின் பிரன்ட் 2, எக்லஸ்டோன், ஸ்கிவர், ஹீதர் நைட்  தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  ஹீதர் நைட் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில்  நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

Related Stories: