அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது: பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரை

புதுடெல்லி: அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த கூறியுள்ளார். டெல்லி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றி வரும் அவர், காந்தி மற்றும் நேருவின் கனவுகளை நினைவாக்கப்போவது அடுத்த 10 ஆண்டுகள் தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். அயோத்தி தீர்ப்பை மக்கள் முழு மனதுடன் வரவேற்றார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒரு சாதனை என்று சொல்லத்தக்க அளவில் சிறப்பாக செயல்பட்டது என்று கூறி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

Related Stories: