டெல்லி ஜாமியா மில்லியா பல்கலை.யில் துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம்: போலீஸ் திணறல்

டெல்லி: டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் கோபால் என்பவர் துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக  ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் கோபால் என்பவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்தார். குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில்  பொறுத்தவரையில் எப்போது குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டதோ, அப்போது இருந்தே இந்த மாணவர்கள் கல்லூரியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இந்த போராட்டமானது இன்று நடந்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் அந்த போராட்டத்திற்குள் நுழைந்து இருக்கிறார். அவர் மாணவ, மாணவியர்களுக்கு  எதிராக கோஷங்களை எழுப்பி வந்தார். தொடர்ந்து அவர் பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் துப்பாக்கியை ஏந்தி மிரட்டியப்படியே சென்றுக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில்  அவர் துப்பாக்கியால் சுட்டதில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். துப்பாக்கியில் இருந்து தோட்டா அந்த மாணவர் கையில் பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்ததால் அருகில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இறுதியாக துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசாரும் மாணவரும்  கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஏன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்? அவரை துப்பாக்கிச்சுடு நடத்தும்படி யாராவது தூண்டிவிட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் அந்த மர்ம நபரை நோக்கி நகர்ந்தபோது இதோ நீங்கள் கேட்ட சுகந்திரம் என்று மிரட்டியப்படியே துப்பாக்கிச்சுடு நடத்தி இருக்கிறார். இதன் பின்னணியில் வேறு ஏதாவது சதி திட்டம் இருக்கிறதா? என்று டெல்லி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த துப்பாக்கிச்சுட்டில் காயமடைந்த சதாம் பரூக் என்ற மாணவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தற்போது டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்தில் கோபால் என்ற மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேரம் போக போக மாணவர்களுடைய எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் மாணவர்களுடைய ஆவேசமும் அதிகரித்து வருவதன் காரணமாக காவல்துறையினர் திணறுகின்றனர். இதனையடுத்து மாணவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதால், இந்த ஆலோசனையை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிடுவார்களா? அல்லது கடந்த காலத்தை போன்று விடிய விடிய இந்த போராட்டம் தொடருமா? என்று எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது. இதனால் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Related Stories: