மனைவியை அவதூறாக பேசியதாகக்கூறி நிதி நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்து மிரட்டிய தொழிலாளி: வாட்ஸ் அப்பில் வீடியோ வைரல்

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் வீட்டிற்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்களை சுலப தவணையில் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்குள் அரிவாளுடன் நுழைந்த தொழிலாளி ஒருவர், ஊழியர்களை மிரட்டி பொருட்களை தாக்கி உடைக்கும் காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோ காட்சியில் கையில் அரிவாளுடன் நுழையும் தொழிலாளி, ‘‘ஏடிஎம் கார்டை செக் பண்ணுடா... எனது மனைவியை அவதூறாக பேசியது எவன்டா’’  என கோபத்துடன் தகாத வார்த்தைகள் பேசியபடி, அரிவாளை வைத்து ஊழியர்களுடன் தகராறு செய்து மிரட்டுவது போல் இருக்கிறது.

இந்த தொழிலாளி, கம்பம், கோம்பை ரோட்டைச் சேர்ந்தவர் என்பதும், இவர் இந்த நிதி நிறுவனத்தின் மூலம் தவணை முறையில் டிவி பெற்றிருப்பதும், போனில் தவணையை கேட்ட நிதி நிறுவன ஊழியர், தொழிலாளியின் மனைவியை அவதூறாக பேசியதாகவும் தெரிகிறது. இதன்பேரில், நிதி நிறுவனத்திற்குச் சென்று தொழிலாளி தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது சம்பந்தமாக நிதி நிறுவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை, சிறிது நேரத்தில் திரும்ப பெற்றுச் சென்றதாகத் தெரிகிறது. நிதி நிறுவனத்திற்குள் அரிவாளை வைத்து ஊழியர்களுடன் தகராறு செய்யும் தொழிலாளி குறித்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: