காரியாபட்டியில் தண்ணீர் வசதியில்லாத மயானம் : இறுதி காரியத்துக்கு வருவோர் அவதி

காரியாபட்டி: காரியாபட்டியில் மயானத்தில் தண்ணீர் வசதியில்லாததால், இறுதி காரியத்துக்கு வருவோர் வீட்டில் இருந்து கொண்டு வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.காரியாபட்டியில் உள்ள பாண்டியன் நகர், என்ஜிஓ நகர், பள்ளத்துபட்டி, மின்வாரிய நகர், பெரியார் நகர், அண்ணா நகர் மற்றும் பேரூராட்சியில் உள்ள 6, 9-12 வார்டுகளில் இறப்பவர்களை செவல்பட்டி மயானத்தில் அடக்கம் மற்றும் தகனம் செய்கின்றனர். இந்நிலையில், மயானத்தில் போதிய அடிப்படை வசதியின்றி இறுதி காரியத்துக்கு வருவோர் அவதிப்படுகின்றனர்.இறுதி காரியம் செய்வோருக்கு தண்ணீர், இடவசதி இல்லை. இரவு நேரங்களில் மின்விளக்கு வசதியில்லை. மதிய வேளையில் செல்வோர் வெயிலில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஒரே தகனமேடை இருப்பதால், ஒன்றுக்கு மேற்பட்டோர் இறக்கும்போது, கொட்டகைக்கு வெளியே காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். மயானத்திற்கு தேவையான தண்ணீர் வீட்டில் இருந்து கொண்டு செல்கின்றனர்.

Advertising
Advertising

எனவே, செவல்பட்டி மாயனத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இதேபோல, சின்னக்காரியாபட்டி, அச்சம்பட்டி, நெடுங்குளம் செல்லும் வழியில் உள்ள மயானத்திலும் போதிய அடிப்படை வசதி இல்லை. இந்த மயானம் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இதில் உள்ள தகரக்கொட்டகையின் கால்கள் துருப்பிடித்து உள்ளன.எனவே, மயானங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு, காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கனேசன் கூறுகையில், ‘50 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட மயானத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. இதனால், இறுதி காரியத்துக்கு வருவோர் அவதிப்படுகின்றனர். கிராமங்களில் கூட அதிநவீன எரியூட்டிகள் உள்ளன. காரியாபட்டி பேரூராட்சி வளர்ந்து வரும் நிலையில், மயானத்தை நவீனப்படுத்த வேண்டும்’ என்றார்.

மணிகண்டன் என்பவர் கூறுகையில், ‘மயானத்தில் தண்ணீர், மின்விளக்கு வசதியில்லை. இறுதி காரியத்துக்கு வருவோர் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வருகின்றனர். தண்ணீர் தொட்டி அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலங்களில் இறுதி காரியத்துக்கு வருவோர் அவதிப்படுகின்றனர். அடிபம்பு இருந்தும் பயனில்லை. இரவு நேரத்தில் செல்ல சரியான பாதை வசதியில்லை. எனவே, மயானத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு, காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: