புளியம்பட்டி அந்தோனியார் ஆலய பெருவிழா ஜன.30ல் கொடியேற்றத்துடன் துவக்கம்: பிப்.10ம் தேதி சப்பரபவனி

நெல்லை: பிரசித்தி பெற்ற புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா, வருகிற 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை 6 மணிக்கு மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி கொடியேற்றி கூட்டுத் திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றுகிறார். தொடர்ந்து பிப்.12ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. தினமும் காலை, மாலையில் ஜெபமாலை, புனிதரின் நவநாள் ஜெபம், மன்றாட்டு திருப்பலி, மறையுரை நடக்கிறது. பாளை மறை மாவட்டத்தின் பல்வேறு பங்குகளை சேர்ந்த பங்குத்தந்தைகள் உள்ளிட்டோர் திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றுகின்றனர். பிப்.9ம் தேதி காலை 7.30 மணிக்கு திருநெல்வேலி சமூக சேவை சங்கம் இயக்குநர் மோட்சராஜன் திருப்பலி நடத்துகிறார். தூத்துக்குடி சிறுமலர் குருமடம் பேராசிரியர் மைக்கேல்ராஜ் மறையுரை ஆற்றுகிறார்.

காலை 11.45 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்டம் லியோ ஜெயசீலன் திருப்பலியும், மாலை 6 மணிக்கு பாளை தூய மரியன்னை குருமடம் அதிபர் சேவியர் டெரன்ஸ் திருப்பலி, மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து நற்கருணை பவனி நடக்கிறது. பிப்.10ம் தேதி காலை 6 மணிக்கு பண்டாரகுளம் பங்குத்தந்தை போஸ்கோ குணசீலன் திருப்பலியும், வேலாயுதபுரம் பங்குத்தந்தை அருள் லூர்து எட்வின் மறையுரையும் நடக்கிறது. காலை 11.45 மணிக்கு சிவகிரி பங்குத்தந்தை சேவியர் திருப்பலியும், அம்பை பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் மறையுரையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பாளை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் திருப்பலி, மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து சப்பரபவனி நடக்கிறது.

பிப்.11ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வாடியூர் பங்குத்தந்தை ஸ்டீபன் திருப்பலியும், வீரவநல்லூர் பங்குத்தந்தை ஞானதினகரன் மறையுரை, காலை 6 மணிக்கு தாளார்குளம் பங்குத்தந்தை சந்தியாகுவின் திருப்பலி, தென்காசி உதவி பங்குத்தந்தை லூர்து மரியசுதனின் மறையுரை நடக்கிறது. காலை 7.30 மணிக்கு வெங்கடாசலபுரம் பங்குத்தந்தை அல்போன்ஸ் திருப்பலி, ஜவஹர்நகர் பங்குத்தந்தை அருள் அம்புரோஸ் மறையுரை நடக்கிறது. 10 மணிக்கு திருச்செபமாலை, பகல் 11.30 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி பெருவிழா திருப்பலி, மறையுரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பாளையஞ்செட்டிகுளம் பங்குத்தந்தை அந்தோணிராஜ் திருப்பலி, சாந்திநகர் ஒடுக்கப்பட்டோர் பணிக்குழு செயலர் சேவியர்ராஜ் மறையுரை நடக்கிறது.

12ம் தேதி காலை 4.30 மணிக்கு வல்லம் பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் திருப்பலி, பாளை ஆயரின் செயலர் சுந்தர் மறையுரை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு திருப்பலி கொடியிறக்கம் நடக்கிறது. கோவில்பட்டி பங்குத்தந்தை அலாய்சியஸ் துரைராஜ் திருப்பலி, இளையரசனேந்தல் பங்குத்தந்தை வினோத்பால்ராஜ் மறையுரை நடக்கிறது. திருவிழாவில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புளியம்பட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் மரியபிரான்சிஸ், உதவி பங்குத்தந்தையர் எட்வின் ஆரோக்கியநாதன், சதீஷ் செல்வ தயாளன் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: