பாலியல் பலாத்காரம் செய்து மத மாற்றம் செய்ய முயன்ற சம்பவத்தை சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : டி.ஜி.பி.யிடம் எம்.பி. ஷோபா மனு

பெங்களூரு: திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து மதமாற்றம் செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக சி.ஐ.டி. விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜ எம்.பி. ஷோபா கரந்த்லாஜே, போலீஸ் டிஜிபியிடம்  மனு அளித்தார். பாஜ எம்.பி. ஷோபா கரந்த்லாஜே பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று சென்றார். அங்கு போலீஸ் டி.ஐி.பி., நீலமணி என் ராஜு மற்றும் சி.ஐ.டி. பிரிவு டி.ஐ.ஜி. பிரவீன்சூட் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததோடு மதம் மாற்றவும் முயற்சி நடந்துள்ளது. இது சர்வதேச பிரச்னை என்பதால் சி.ஐ.டி. விசாரணை மிகவும் முக்கியமான ஒன்று.  

ஏற்கனவே காதலிப்பதாகவும் பின்னர் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி பாலியல் பலாத்காரம் செய்து மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதால், குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்த பெண் பாதிக்கப்பட்டு தானாக முன்வந்து வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இது குறித்து ஏற்கனவே முதல்வர் எடியூரப்பாவிடம் முறையிட்டுள்ளேன். இது மட்டும் இன்றி, பெங்களூரு மாநகர போலீஸ் ஆணையர் பாஸ்கர் ராவிடமும் புகார் அளித்துள்ளேன். இந்த விவகாரம் என்பது நாளுக்கு நாள் புதுப்புது பிரச்னைகளை எழுப்பி வருகிறது. கர்நாடகாவில் மட்டும் இன்றி பல்ேவறு மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, திருமண ஆசைகாட்டி, பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் மதமாற்றம் செய்வது சட்டத்திற்கு எதிரானது. இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையுடன், சி.ஐ.டி. விசாரணையும் நடத்த வேண்டியது அவசியம் என அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளேன் என்றார்.

Related Stories: