டெல்லி சிறப்பு அதிகாரி என்று கூறி ஆந்திர நகை வியாபாரியிடம் ரூ1.20 கோடி தங்கம் அபேஸ்: ஆசாமிகளுக்கு வலை

தண்டையார்பேட்டை: ஆந்திர மாநிலம் ெநல்லூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (20). நகை வியாபாரியான இவர், சென்னையில் நகை வாங்க ரூ1.23 கோடியுடன் நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தார். பாரிமுனை, சவுகார்பேட்டை, யானைகவுனி பகுதிகளில் உள்ள மொத்த தங்கம் விற்பனை செய்யும் இடங்களுக்கு சென்றார். அங்கு ரூ1.20 கோடி மதிப்பில் 4 கிலோ தங்க கட்டிகளை வாங்கினார். அதனை ஒரு பையில் வைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு யானைகவுனி திருப்பள்ளி தெரு வழியாக நடந்து சென்றார்.  அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேர், தினேஷ்குமாரை வழி மறித்தனர்.

பின்னர் அவரிடம், ‘‘நாங்கள் டெல்லி சிறப்பு போலீஸ். நீங்கள் ஆந்திராவுக்கு கஞ்சா கடத்துவதாக தகவல் கிடைத்தது. உங்கள் பையை சோதனையிட வேண்டும்’’ என்று கூறி தினேஷ்குமார் கையில் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். இதன்பிறகு அந்த பையை தினேஷ்குமாரிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் அங்கிருந்து பைக்கில் கிளம்பி சென்றனர்.  தினேஷ்குமார் பையை திறந்து பார்த்தபோது தங்க கட்டிகள் இல்லாததால் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தினேஷ்குமார் கொடுத்துள்ள புகாரின்படி,

யானைகவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தபோது, அவர்களை பயன்படுத்திய பைக் பதிவு எண் மத்திய பிரதேசத்தை சேர்ந்தது என ெதரியவந்தது. கடந்த ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரானி கொள்ளயர்கள் கைவரிசை அதிகமாக இருந்தது. அவர்கள் மீண்டும் கைரிசையாயை காட்ட தொடங்கியுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: