சின்ன வீடே கதி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

திருவெறும்பூர்: திருச்சி, நவல்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டரை திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து  உத்தரவிட்டுள்ளார். இதற்கான காரணங்கள் குறித்து காவல்துறை வட்டாரத்தில்  விசாரித்தபோது கிளுகிளுப்பான கதைகள் வெளிவந்தது.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செந்தில்குமரன் (51). ஒன்றரை ஆண்டாக பணியாற்றி  வந்த இவர், வழக்கு விசாரணையில் வேகம் காட்டவில்லை. கோப்புகளை சரியாக கையாளவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணங்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து, காவல்துறை வட்டார தகவலில் தெரியவந்ததாவது: செந்தில்குமரன் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். இதற்கு வசதியாக நவல்பட்டு பகுதியில் செந்தில்குமரன் சில சின்ன வீடுகள் வைத்திருந்துள்ளார். போலீஸ் நிலையத்தில் பணி செய்வதைவிட இந்த சின்ன வீடே கதி என்று நேரத்தை கழித்தார். இதுபற்றி உளவுப்பிரிவு போலீசார் மேலிடத்தில் புகார் செய்து உள்ளனர். இதுதொடர்பாக மேலிடத்தில் இருந்து எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனாலும் செந்தில்குமரன் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை. போலீஸ் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திலேயே பாலியல் விடுதி செயல்பட்டு வந்துள்ளது.  இதை செந்தில்குமரன் கண்டுகொள்ளவில்லை. காரணம் அங்கும் செந்தில்குமரன் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதுகுறித்தும், மேலிடத்துக்கு புகார் வந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்னர் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் அந்த விபசார விடுதியில் புகுந்து சோதனை நடத்தி அழகிகள், தொழில் நடத்தியவர்கள் அனைவரையும் பிடித்து வழக்கு பதிந்தனர்.

இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணி செந்தில்குமரனுக்கு கொடுக்கப்பட்டது. 1ம் தேதி இரவு இவர் ஓட்டு  எண்ணும் மையத்தில் இருக்க வேண்டும். ஆனால் அவர் அங்கு இல்லை. அப்போது டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் திடீர் ரெய்டு நடத்தினார். அப்போது,  டூட்டியில் இன்ஸ்பெக்டர் இல்லை.உடனே, செல்போனில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு கொண்டு உள்ளார்.  இன்ஸ்பெக்டர் ஓட்டு எண்ணும் இடத்தில்  இருப்பதாக போனில் தெரிவித்தார். அவர் பொய் கூறுவதை கேட்டு பாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். எனவே,  இந்த விஷயத்திலும் அவர் கையும்  களவுமாக சிக்கி விட்டதால் வேறு வழியின்றி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: